புதிதாக அமைக்கப்பட்ட அரசியல் அமைச்சரவை?
04.03.2024 08:08:46
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசியல் அமைச்சரவையொன்றை நியமித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறித்த அரசியல் அமைச்சரவை குழுவினர் கடந்த திங்கட்கிழமை இரவு கூடியுள்ளனர் எனவும், அவர்களில் அமைச்சரவையில் இடம்பெறாத ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.