அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே நிலநடுக்கம்
17.04.2024 07:32:31
அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.