ETR.FM

3 புதிய கொரோனா தொற்று வகைகள் மியன்மாரின் 5 நகரங்களில் கண்டறிவு !

16.06.2021 09:34 1 நிமிட வாசிப்பு
3 புதிய கொரோனா தொற்று வகைகள் மியன்மாரின் 5 நகரங்களில்  கண்டறிவு !

மியன்மாரின் 5 நகரங்களில் அல்பா, டெல்டா, கப்பா ஆகிய மரபணு மாற்ற வைரஸ் பரவுவது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 11 பேரிடம் இந்த வைரஸ் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இருவரிடம் அல்பா மரபணு மாற்ற வைரஸ், 5 பேரிடம் டெல்டாவும், 4 பேருக்கு கப்பா ரக மரபணு மாற்ற வைரஸ் தொற்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாங்கூன், கலாய், மண்டாலே, மயிக், தமு என நாட்டின் பல பாகங்களில் உள்ள 5 நகரங்களில் இந்த பரமணு மாற்ற வைரஸ் பரவி வருகின்றன.

இந்நிலையில் அல்பா மற்றும் டெல்டா போன்ற புதிய வகைகள் அதிக அளவில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்பதால், கொரோனா கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்றுமாறு அமைச்சு மக்களை எச்சரித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்