ETR.FM

செம்மணி நீதிக்கான மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

07.11.2026 13:15 1 நிமிட வாசிப்பு
செம்மணி நீதிக்கான மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

செம்மணி புதைகுழிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழர்களின் அடுத்தகட்ட தந்திரோபாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றது.

சிவில் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், புதிய தலைமுறை மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவும் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்தது.

இதன்போது எட்டப்பட்ட ஒருமித்த தீர்மானத்தின்படி, செம்மணியில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும் மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் எதிர்வரும் 17.11.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு செம்மணி பகுதியில் இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்தில் அரசியல் உணர்வும் சமூகப் பொறுப்பும் கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு புதிய தலைமுறை மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்