கொரோனா கட்டுப்பாடுகள் சுவிஸ் வாக்காளர்கள் ஒப்புதல்

29.11.2021 07:37:39

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க, சுவிட்சர்லாந்தில் வாக்காளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா முதல் அலை பரவிய போது சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி, மக்களிடம் கருத்து கேட்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

நேற்று நடந்த ஓட்டெடுப்பில் 63 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனா பரவலை தடுக்க, கட்டுப்பாடுகள் விதிக்க ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டோர், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்போர் ஆகியோரை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிப்பது பற்றி சுவிட்சர்லாந்து அரசு ஆலோசித்து வருகிறது.