ETR.FM

ஈழத் தமிழர்களுக்காக தென்னாபிரிக்காவிலிருந்து ஒலித்த குரல் ஓய்ந்தது!

08.12.2021 04:49 1 நிமிட வாசிப்பு
ஈழத் தமிழர்களுக்காக தென்னாபிரிக்காவிலிருந்து ஒலித்த குரல் ஓய்ந்தது!

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.

90களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

1998 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க நாடாளுமன்றக் குழுவுடன் இலங்கை வந்த அவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்திருந்தார்.

சர்வதேச ரீதியாக தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற பல பேச்சுவார்த்தைகளிலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.

அவரது மரணம் தொடர்பாக உலக தமிழர் பேரவை தமது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்