வங்கதேசத்தில் 1200 கைதிகள் தப்பியோட்டம்...
வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தை பயன்படுத்தி 1200 கைதிகள் சிறையில் இருந்து தப்பி விட்டதாகவும் அவர்கள் இந்தியாவிற்குள் தப்பி வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்துகிறது.
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை மற்றும் கலவரங்கள் நடந்து வரும் நிலையில் 1200 கைதிகள் தப்பிள்ளதாகவும் அவர்கள் ஆயுதங்களுடன் இந்தியா வர முயற்சி செய்யலாம் என்றும் வங்கதேச பாதுகாப்பு அமைப்பு, இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் அவ்வப்போது தகவல் தொடர்பில் ஈடுபட்டு பாதுகாப்பு குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் எல்லை பகுதியில் தப்பியோடிய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் வங்கதேச பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.