இன்றும் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்பட்டுள்ளன!

10.09.2021 05:33:43

நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், பேலியகொடை மெனிங் சந்தையும், இன்றைய தினமும் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில், நேற்றைய தினமும் அவற்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.