நிலக்கரி சுரங்கத்தில் தீ 11 பேர் உடல் கருகி பலி

26.11.2021 08:18:28

ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் கெமரோவோ என்ற இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் 44 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் இருந்த 285 தொழிலாளர்களில் 239 பேர் நேற்று மாலை வரை மீட்கப்பட்டு இருந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.