ETR.FM

பசிபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

14.04.2025 07:53 1 நிமிட வாசிப்பு
பசிபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பிஜியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 174 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் இன்று உள்ளூர் நேரப்படி காலை 8.00 மணியளவில் ஏற்பட்டதுடன்
நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்