ETR.FM

வன்முறை கும்பல் வட்டுக்கோட்டையில் அட்டகாசம்

20.09.2021 12:10 1 நிமிட வாசிப்பு
வன்முறை கும்பல் வட்டுக்கோட்டையில் அட்டகாசம்

வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (19) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று, நேற்று இரவு 7 மணியளவில் முதலியார் கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

வாள்வெட்டிற்கு இலக்கான குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்