ETR.FM

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,476பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு !

19.06.2021 08:03 1 நிமிட வாசிப்பு
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,476பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு !

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் பத்தாயிரத்து 476பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 46இலட்சத்து 10ஆயிரத்து 893பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 956பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 85ஆயிரத்து 180பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 210பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 42இலட்சத்து 97ஆயிரத்து 757பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்