ETR.FM

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என கோரிக்கை!

06.03.2022 05:26 1 நிமிட வாசிப்பு
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என கோரிக்கை!


இலங்கையில், இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இதன்படி, எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்றைய தினம் (06-03-2022) திட்டமிட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்படாது அல்லது குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்