அமெரிக்காவுக்கான இஸ்ரேலின் பயணத் தடை

20.12.2021 10:16:28

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக திங்கள் முதல் அமுலாகும் வகையில் அமெரிக்காவுக்கான பயணத் தடை உத்தரவினை இஸ்ரேல் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்ய பரிந்துரைத்தனர்.

மேலும் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல ஐரோப்பிய நாடுகளை அதன் கொவிட் “சிவப்பு பட்டியலில்” சேர்த்தது.

 

அதன்படிஅமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், ஹங்கேரி, மொராக்கோ, போர்ச்சுகல், கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கான இஸ்ரேலின் பயணத் தடைகள் திங்கள் முதல் அமுலுக்கு வந்துள்ளன.