ETR.FM

அவுஸ்திரேலியா அறிவித்துள்ள தடைகள்!

18.11.2026 15:16 1 நிமிட வாசிப்பு
அவுஸ்திரேலியா அறிவித்துள்ள தடைகள்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேறிகளின் செயல்பாடுகளை இலக்காகக் கொண்டு அவுஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது. 

சட்டவிரோதக் குடியேற்ற விரிவாக்கம் மற்றும் பலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள மூன்று தனிநபர்கள் மற்றும் நான்கு அமைப்புகளுடன் அவுஸ்திரேலிய வணிகங்கள் வர்த்தகம் செய்வதைத் தடை செய்துள்ளது.

இந்த அறிவிப்பில் டேனியல்லா வெய்ஸ், இட்டாமர் யெஹுடா லெவி மற்றும் எலியாவ் லிபி ஆகிய மூன்று தனிநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், குஷ் எமுனிம் சென்ட்ரல் கோ-ஆப்பரேட்டிவ் அசோசியேஷன் லிமிடெட்டின் குடியேற்ற இயக்கமான அமானா, தி நச்சலா மூவ்மென்ட், ஹஷோமர் யோஷ் மற்றும் எயால் ஹரி யெஹுடா கம்பெனி லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்களின் பெயர்களையும் அது பட்டியலிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே பிரிட்டிஷ் அல்லது ஐரோப்பியத் தடைகளுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்