ETR.FM

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.30 கோடியாக உயர்வு

01.12.2021 07:38 1 நிமிட வாசிப்பு
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.30 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26.30 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 30 லட்சத்து 10 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 98 ஆயிரத்து 182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரத்து 20 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 52 லட்சத்து 32 ஆயிரத்து 535 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை மீண்டும் நெருங்கி உள்ளது.

அங்கு புதிதாக 98,779 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 49,420,598 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 802,933 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்