நேபாளத்தில் விமான விபத்து

24.07.2024 14:56:10

நேபாளத்தில் உள்ள கன்மாண்டு சர்வதேச விமான நிலையம் அருகே சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது

 

விமானம் புறப்பட்டு சிறிய நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதுடன் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தின் போது விமானத்தில் 19 பேர் இருந்ததாகவும், விபத்துக்குள்ளாகி வெடித்த விமானத்தில் 4 உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டதாகவும் நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.