போரிஸ் ஜான்சனின் புகழ் சரிந்து இருப்பது தெரியவந்துள்ளது.

01.05.2022 17:31:37

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கெய்ர் ஸ்டார்மருடன் ஒப்பிடுகையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் புகழ் பொதுமக்கள் மத்தியில் சரிந்து இருப்பது பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பிரதமருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு மத்தியில், முன்னாள் கன்சர்வேடிவ் துணைத் தலைவர் லார்ட் ஆஷ்கிராஃப்ட் நடத்திய ஆய்வு முடிவுகள் இன்று Mail செய்திதளத்தில் வெளியானது.

இதில், தொழிலாளர் கட்சியின் பிரதிநிதி கெய்ர் ஸ்டார்மருடன் ஒப்பிடுகையில் பழமைவாத கட்சியின் பிரதிநிதி மற்றும் பிரித்தானிய பிரதமருமான போரிஸ் ஜான்சனின் புகழ் பொதுமக்கள் மத்தியில் சரிந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் கெய்ர் ஸ்டார்மர் 57 சதவிகித ஆதரவும், போரிஸ் ஜான்சன் 43 சதவிகித புகழும் பொதுமக்கள் இடையே தக்கவைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் 8000 நபர்களிடம் நடத்தபட்ட இந்த மாதிரி கணக்கெடுப்பில் 55 சதவிகித பொதுமக்கள் ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் 25 சதவிகித மக்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.