ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்த முதல் இஸ்ரேலிய பிரதமர்
14.12.2021 09:08:48
இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் இஸ்ரேல் பிரதமர் என்ற பெருமையும் இவரையேச் சாரும்.
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் மொஹம் பின் சயீத்தை அபுதாபியில் உள்ள அவரது தனிப்பட்ட அரண்மனையில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, பத்திரிகையாளர்கள் இன்றி குறைந்த அளவிலான தூதுக்குழுவுடன் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.