ETR.FM

யாழ்ப்பாணத்தில் 22 ஆவது கொரோனா மரணம் பதிவு

10.05.2021 10:32 1 நிமிட வாசிப்பு
யாழ்ப்பாணத்தில் 22 ஆவது கொரோனா மரணம் பதிவு

யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதியவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பயனளிக்காது நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பும் காரணம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த முதியவரின் சடலம் இன்று யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்படவுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்