நேபாள அதிபர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

08.10.2022 11:09:16

நேபாள நாட்டின் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (வயது 61). இவருக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.