சமூக வலைத்தளமூடாக உளவு - 6 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

18.12.2021 09:01:33

முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா தங்களது சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்ட 6 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், இந்தியா, வடக்கு மாசிடோனியா மற்றும் சீன உள்ளிட்ட நாடுகளிலிருந்து  6 நிறுவனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை உளவு பார்த்தது தெரியவந்துள்ளதாக மெட்டா கூறியுள்ளது.

இந்நிறுவனங்களுக்கு தொடர்புடைய உள்கட்டமைப்புகள் முடக்கப்பட்டு உளவு பார்ப்பதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் முகநூல் மற்றும் இன்ஸ்டகிராமில் உள்ள அந்நிறுவனங்களின் 1,500க்கும் மேற்பட்ட கணக்குகளும் தடை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இந்த கணக்குகளை வைத்து தான் ரகசியமாக உளவு பார்ப்பது மக்களின் தனிப்பட்ட தகவல்களை தந்திரமாக திருடுவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் அந்நிறுவனகள் ஈடுபட்டு வந்ததாகவும் மெட்டா குற்றம்சாட்டியுள்ளது.