ETR.FM

ஏமனில் படகு கவிழ்ந்து விபத்து:

11.06.2024 07:40 1 நிமிட வாசிப்பு
ஏமனில் படகு கவிழ்ந்து விபத்து:

ஏமனில் புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆபிரிக்காவில் இருந்து வருகை தந்த புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏமனின் ஏடன் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 78 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், 100 பேர் மாயமாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாயமானவர்களைத்  தேடும் பணி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு 97,000 புலம்பெயர்ந்தோர் ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் இருந்து யேமனுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்