உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு

18.12.2021 09:03:11

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 245,844,155 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.3 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 273,976,637 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 245,844,155 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,360,760 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்கு தற்போது 22,771,722 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 89,185 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:அமெரிக்கா  - பாதிப்பு - 51,610,281,   உயிரிழப்பு - 826,719,    குணமடைந்தோர் - 40,474,346    இந்தியா        -  பாதிப்பு - 34,732,592,  உயிரிழப்பு -  476,897,   குணமடைந்தோர் - 34,162,765பிரேசில்        -  பாதிப்பு - 22,209,020,  உயிரிழப்பு -  617,647,  குணமடைந்தோர் - 21,414,318இங்கிலாந்து- பாதிப்பு -  11,190,354,  உயிரிழப்பு -  147,048,  குணமடைந்தோர் - 9,697,659ரஷ்யா           -  பாதிப்பு -  10,159,389,   உயிரிழப்பு -  295,104,   குணமடைந்தோர் - 8,914,225