ஸ்வீடனில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது!
சுவீடனில் குரங்கு அம்மை நோயுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் சுவீடன் பொதுச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆபிரிக்காவில்அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே சுவீடனிலும் இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோய் பரவல் காரணமாகக் கொங்கோ குடியரசில் மாத்திரம் 450 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எம்பொக்ஸ் நோய் நிலைமை வேகமாகப் பரவுவதற்கான சாத்தியம் நிலவுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு சர்வதேச ரீதியிலான ஒன்றிணைந்த முயற்சிகள் அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.