ETR.FM

ஜப்பான் பிரதமரின் இந்திய பயணம் தள்ளிவைப்பு - கொரோனா பரவல்

21.04.2021 10:24 1 நிமிட வாசிப்பு
ஜப்பான் பிரதமரின் இந்திய பயணம் தள்ளிவைப்பு - கொரோனா பரவல்

சமீபத்தில் ஜப்பானின் பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பிரதமர் யோஷி ஹைட் சுகா இந்த மாத இறுதியில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜப்பான் பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அதிகரிப்பை தடுப்பதில் பிரதமர் யோஷிஹைட் சுகா கவனம் செலுத்த உள்ளார் என்று அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் ஜப்பானின் பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்