ETR.FM

உதயங்க வீரதுங்க கைது

10.01.2025 14:39 1 நிமிட வாசிப்பு
உதயங்க வீரதுங்க கைது

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பிரதேசத்தில், அயலவர் வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உதயங்க வீரதுங்கவை ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்