ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுத்தது உக்ரைன்
25.07.2022 10:58:38
உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களிலேயே ரஷ்யாவின் முக்கிய ஆயுத கிடங்கை தாக்கி அழித்து பதிலடி கொடுத்துள்ளது உக்ரைன்.
கருங்கடலில் இருந்து தானிய ஏற்றுமதியை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களில், ரஷ்யா தெற்கு உக்ரைனில் உள்ள முக்கிய துறைமுகமான ஒடேசா மீது ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரத்தில் ஹார்லிவ்காவில் உள்ள ரஷ்யாவின் ஆயுத கிடங்கை உக்ரைன் பாதுகாப்புப் படைகள் குண்டு வீசி தகர்த்துள்ளன.
ரஷ்ய ஆயுத கிடங்கு முழுவதும் வெடித்துச் சிதறி கொழுந்துவிட்டு எரிந்தது. காளான் வடிவ கரும்புகை விண்ணை எட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.