ஒரே நாளில் அமெரிக்காவில் 2 லட்சம் கொரோனா தொற்று
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.74 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 27,74,91,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,85,89,703 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53 லட்சத்து 92 ஆயிரத்து 780 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,35,09,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,497 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.ஓமிக்ரான் பரவல் அதிகம் உள்ள அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 2 லட்சத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 224,705 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1520 பேர் பலியாகி உள்ளனர். பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்து 1 லட்சத்தை தாண்டிவிட்டது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா - பாதிப்பு - 5,25,06,200, உயிரிழப்பு - 8,32,939, குணமடைந்தோர் - 4,09,08,146இந்தியா - பாதிப்பு - 3,47,63,305, உயிரிழப்பு - 4,78,468, குணமடைந்தோர் - 3,42,01,966பிரேசில் - பாதிப்பு - 2,22,22,928. உயிரிழப்பு - 6,18,128, குணமடைந்தோர் - 2,14,14,318இங்கிலாந்து- பாதிப்பு - 1,16,47,473, உயிரிழப்பு - 1,47,573, குணமடைந்தோர் - 99,22,480ரஷ்யா - பாதிப்பு - 1,02,92,983, உயிரிழப்பு - 3,00,269, குணமடைந்தோர் - 90,97,521தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-துருக்கி - 92,28,835பிரான்ஸ் - 87,98,028ஜெர்மனி - 69,15,353ஈரான் - 61,77,885ஸ்பெயின் - 56,45,095இத்தாலி - 54,72,469அர்ஜெண்டினா - 54,15,501கொலம்பியா - 51,12,719இந்தோனேசியா - 42,61,072போலந்து - 40,00,270