ETR.FM

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

27.04.2021 10:04 1 நிமிட வாசிப்பு
அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரச ஊழியர்கள் பகுதி பகுதியாக பணிபுரியும் வகையிலான திட்டங்களுடன் கூடிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

இதேவேளை அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்