யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

16.07.2024 07:51:19

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

 

அதன் படி அவர் கட்டார் எயார்வேஸ் விமானமான KR – 662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்

இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு அவர் வருகைதந்துள்ளதுடன் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.