ETR.FM

3 அரசியல் கட்சிகள் புதிதாக பதிவு!

16.11.2026 15:09 1 நிமிட வாசிப்பு
3 அரசியல் கட்சிகள் புதிதாக பதிவு!

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 7 (5) ஆம் உப பிரிவின் கீழ், தேர்தல் ஆணைக்குழுவினால் மூன்று புதிய அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவினால் இது தொடர்பான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 2026 ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அப ஜனதா பெரமுன

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்

இந்த மூன்று புதிய கட்சிகளின் இணைவோடு, தேர்தல் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

     
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்