இஸ்ரேலில் புதிய வகை கோவிட்
ஒமைக்ரான் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பெரும் கவலை அடைந்துள்ள நிலையில், தற்போது இஸ்ரேலில் புதிதாக உருமாற்றம் அடைந்த கோவிட் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் அறிகுறிகளுடன், இன்புளூயன்ஸா வைரசும், கோவிட் வைரசும் சேர்ந்து இருப்பதால், அதற்கு புளோரோனா வைரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள ராபின் மருத்துவ மையத்திற்கு பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இன்புளூயன்ஸா காய்ச்சலுடன் கோவிட் அறிகுறிகளும் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் உடல்நல பாதிப்புகள் ஏதுமில்லை. லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. விரைவில் அவர் வீடு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அந்த பெண்ணின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கனவே ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக 5வது அலையை எதிர்கொண்டுள்ள இஸ்ரேல், தற்போது புளோரோனா வைரசால் கவலை அடைந்துள்ளது. ஏற்கனவே, அந்நாட்டில் பலவீனமானவர்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாடு துவங்கி உள்ளது.