ETR.FM

அதிகபோதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞன் யாழ்ப்பாணத்தில் மரணம்

06.03.2022 05:36 1 நிமிட வாசிப்பு
அதிகபோதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞன் யாழ்ப்பாணத்தில் மரணம்

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் கட்டுவன் மேற்கை சேர்ந்த 19 வயதான கட்டடத் தொழிலாளி அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்டதால்  உயிரிழந்துள்ளார்.

மயக்கமுற்ற நிலையில் நேற்று முன்தினம் மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், ஒரு சில மணித்தியாலங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டமையே உயிரிழப்பிற்கான காரணம் என யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்