ETR.FM

வீடு புகுந்து மர்ம நபர் தாக்குதல்

29.10.2022 15:41 1 நிமிட வாசிப்பு
வீடு புகுந்து மர்ம நபர் தாக்குதல்

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகராக இருந்து வருபவர் நான்சி பெலோசி. இவர் தனது குடும்பத்தினருடன் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நான்சி பெலோசி வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அந்த நபர் வீட்டில் இருந்த நான்சியின் கணவர் பால் பெலோசியை கடுமையாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்