ETR.FM

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

16.11.2026 14:51 1 நிமிட வாசிப்பு
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

இலங்கை பொலிஸ் சேவையில் தற்காலிக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பிரதிப் பொலிஸ்மா மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மாமா அதிபரும் சட்டத்தரணியுமான பிரியந்த வீரசூரிய வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் இல்லாத காலப்பகுதியில் நாட்டின் பொலிஸ் சேவையை மேற்பார்வையிடுவதற்காக, பதில் தலைவரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நிர்வாகப் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பணியாற்றி வரும் தர்மரத்ன, பிரியந்த வீரசூரிய மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமை புரிவார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்