காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்போம்: தலிபான்கள்
'காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்' என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், இன்று ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். இந்நிலையில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:
நாங்கள் இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுப்போம். ஏனென்றால் இஸ்லாமியர்கள் எங்கள் சொந்தங்கள்; எங்கள் சொந்த மக்கள். காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரம் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்துவது எங்கள் கொள்கை அல்ல. உங்கள் சட்டப்படி இஸ்லாமியர்களுக்குச் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆப்கனைத் தலிபான்கள் கைப்பற்றிய போது, ஷாஹீன் அளித்த பேட்டியில், 'காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம். அது உள்நாட்டுப் பிரச்னை' எனத் தெரிவித்திருந்தார். அதற்கு முரணாக தற்போது பேசியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் ஒருவர் பேசுகையில், 'இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெற தலிபான்கள் உதவ வேண்டும்' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காபூல்: 'காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்' என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானைக்
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.