எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் வெளியான தகவல்!

04.03.2024 08:23:00

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் குறித்து இன்று போலியான தகவல் பரவியதை அடுத்து நாம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை எம் கே சிவாஜிலிங்கம் அவர்களுக்கு  (02.3.2024)  அன்று ஏற்ப்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.