பூமி குறித்த புதிய கண்டுபிடிப்பு!
18.06.2024 07:50:59
கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன் இது நேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்காரணமாக உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலமாற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 2010ஆம் ஆண்டில், பூமியின் உட்புறத்தின் சுழற்சி வேகம் குறைய ஆரம்பித்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.