ETR.FM

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் தீப்பிடித்து எரியும் கப்பல்

07.03.2024 08:18 1 நிமிட வாசிப்பு
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் தீப்பிடித்து எரியும் கப்பல்

சரக்குக் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறித்த கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்.

யேமனின் ஏடன் துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதியில் உள்ள பார்படாஸ் கொடியுடன் கூடிய சரக்கு கப்பலை கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து தாக்கியுள்ளதாக  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போதே கப்பலிலிருந்த 20 பணியாளர்களில் மூவர் உயிரிழந்தனர் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கப்பலில் இரண்டு இலங்கையர்களும் ஒரு நேபாளியரும் காவலர்களாக செயற்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும், தற்போது கப்பல் தீப்பிடித்து எரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்