ETR.FM

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்.

28.02.2021 10:20 1 நிமிட வாசிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொஸ்லந்தை நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயமான சம்பளத்தை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களைப் போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்