யாழ் களஞ்சியசாலையில் தீ சம்பவம்!

02.01.2024 05:54:35


யாழ் – பருத்தித்துறை பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் உடப்புசல்லாவ தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதான ஒருவரும் 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

மேலும் தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது