ஐ.சி.சி உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு !

10.01.2024 15:57:29

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட ஆடவருக்கான ஐ.சி.சி உலக்க்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


சினெத் ஜெயவர்தன தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் தமிழ் வீரரான லிட்டில் சங்கா என அழைக்கப்படும் சாருஜன் சண்முகநாதன் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

குறித்த அணியில் புலிந்து பெரேரா, ஹிருன் கபுருபண்டார, ரவிஷான் நெத்சரா, ருசாண்டா கமகே, தினுர கலுபஹன, மல்ஷா தருபதி, விஷ்வ லஹிரு, கருகா சங்கீத், துவிந்து ரணதுங்க, ருவிஷான் பெரேரா, சுபுன் வடுகே, விஹாஸ் தேவ்மிக, விஷேன் ஹலம்பகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம் தினுக தென்னகோன், ஹிரன் ஜயசுந்தர ஆகிய வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் 19 வயதிற்கு உட்பட்ட ஆடவர் அணி நாளை காலை தென்னாப்பிரிக்காவிற்கு புறப்படவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.