மாணவர்களிற்கான விசாக்களை இறுக்கமாக்க தீர்மானம்
அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளதை தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களிற்கான விசா நடைமுறைகளை அவுஸதிரேலியா இறுக்கமானதாக மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை முதல் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல விரும்பும்வெளிநாட்டுமாணவர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களிற்கான விசாக்களுக்கு ஆங்கில தேவைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் முதல் நாங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவிற் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் கிளாரா ஓநெய்ல்தெரிவித்துள்ளார்.
தொழில்வாய்ப்பைமையமாக வைத்துஅவுஸ்திரேலியாவிற்கு வரவிரும்பும் மாணவர்களை கட்டு;ப்படுத்துவதற்காக உண்மையா மாணவர் சோதனையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ள அவுஸ்;திரேலியா விசிட்டர் விசாக்களில் வருபவர்களிற்கு அவுஸ்;திரேலியாவில் மேலும் தங்கியிருக்க முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்படும்.