காணி அபகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்திய ஜீவன் தொண்டமான்

13.12.2023 16:00:00

ஹட்டனில் காணி அபகரிப்பு நடவடிக்கை ஒன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தடுத்து நிறுத்தியுள்ளார். 

ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த காணியில் கட்டப்பட்டிருந்த தற்காலிக கட்டடமும் அகற்றப்பட்டுள்ளதுடன் இதன் பின்னர் காணியை ஆக்கிரமிக்க முற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.