காசா பொது மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை!

12.07.2024 07:56:55

காசாவில்(Gaza) இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல்(Israel) தயாராகி வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் தற்போது 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற நிலையில் இஸ்ரேல் இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

இஸ்ரேலின் குறித்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 38 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.