ETR.FM

12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல்!

09.02.2024 12:34 1 நிமிட வாசிப்பு
12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல்!

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். அதில் குறைபாடுகள் இனங்காணப்பட்டட 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.

பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69,000 ரூபா தண்டப்பணமும் ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 86,000 ரூபா தண்டப்பணமும் இரு உணவகங்களினை சீலிட்டு மூடவும் மல்லாக நீதவான் தீர்ப்பளித்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்