'கூகுள்' நிறுவனத்திற்கு ரூ.750 கோடி அபராதம்
ரஷ்யாவில், தடை செய்யப்பட்ட பதிவை நீக்கத் தவறிய 'கூகுள்' நிறுவனத்திற்கு 750 கோடி ரூபாய் அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் சமூக ஊடக தளங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.போதை பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள், போராட்டங்கள் ஆகியவை தொடர்பாக வெளியிடப்படும் பதிவுகளை நீக்காத சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ரஷ்ய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பதிவு ஒன்று கூகுளில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த டகான்ஸ்கை மாவட்ட நீதிமன்றம், தடை செய்யப்பட்ட பதிவை நீக்காமல் இருந்ததற்காக கூகுள் நிறுவனத்தை கடுமையாக சாடியது. மேலும் இதற்கு தண்டனையாக கூகுள் நிறுவனத்திற்கு 750 கோடி ரூபாய் அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.