அமெரிக்காவில் காட்டுத் தீ 1,000 வீடுகள் சாம்பல்

03.01.2022 11:46:13

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ராக்கி மலை அடிவாரத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் இங்கு காட்டுத் தீ பரவியது.அந்தப் பகுதி முழுதுமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதுவரை 1,00க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. மூன்று பேரை காணவில்லை என்றும், அவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.