ETR.FM

இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் காலமானர்!

03.05.2024 08:31 1 நிமிட வாசிப்பு
இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் காலமானர்!

சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 வயதில் உயிரிழந்துள்ளதாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது.
அவரின் உயிரிழப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனினும், ஜோஷ் பேக்கர் உயிரிழப்பு நம் அனைவரையும் பேரழிவுக்கு ஆளாக்கியுள்ளதாக, கவுண்டியின் தலைமை நிர்வாகி ஆஷ்லே கில்ஸ், தெரிவித்துள்ளார்.

தனது 17 ஆவது வயதில் கவுண்டி கிளப்புடன் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜோஷ் பேக்கர், 2021ஆம் ஆண்டு வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடத் தொடங்கி, தனது கிரிக்கெட் பயணத்தைத் ஆரம்பித்தார்.

மேலும், சர்வதேச சுற்றுகளில் அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரித்தானியா அணியிலும் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்